பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது... இந்தியா உறுதி!

 
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது... இந்தியா உறுதி!
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்து உள்ளது. அந்த நாடு பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் வழங்கப்படாது என மீண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடனும், மீண்டும் தொடராத வகையிலும் தனது ஆதரவை நிறுத்தும் வரை சிந்துநதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். நமது பிரதமர் கூறியது போல, 'தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது' என தெரிவித்தார். 

காஷ்மீர் தொடர்பான எந்த இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடப்பதானால், அது சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறுவது தொடர்பாக மட்டுமே பேசப்படும் என்றும் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?