ரூ3,724 கோடி ஒப்பந்தத்தை கைப்பற்றிய இன்போசிஸ் !!

 
இன்போசிஸ்


இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான 'இன்போசிஸ்' நிறுவனம் 'டான்ஸ்கே' வங்கியிடம் இருந்து 3,724 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டான்ஸ்கே வங்கியின் கிளைகள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இதன் தகவல் தொழில்நுட்ப மையத்தை கைப்பற்றும் நோக்கில் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், இதற்கான 454 மில்லியன் டாலர்களை, அதாவ இந்திய மதிப்பில் ரூபாய் 3,724 கோடிக்கான ஒப்பந்தத்தை கைப்பற்றிஉள்ளது.

இன்போசிஸ்


இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது... எங்கள் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ள டான்ஸ்கே வங்கி, டிஜிட்டல் மாற்றங்களை வேகமாகவும், திறமையாகவும் விரைவுப்படுத்த புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, சிறந்த வாடிக்கையாளர் அனுபவங்கள், செயல்பாட்டுத் திறன் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட தொழில்நுட்ப முன்னுரிமைகளை வங்கி பெறும். இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கானதாக இருந்தாலும், அதிகபட்சமாக மேலும் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க வாய்ய்பு இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது எனக்கூறப்பட்டுள்ளது.

இன்போசிஸ்
இந்த ஒப்பந்தம் குறித்து இன்போசிஸ் நிறுவன சி.இ.ஓ. சலீல் பாரிக் கூறுகையில், "டான்ஸ்கே வங்கிக்கு டிஜிட்டல், கிளவுட், டேட்டா சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கில், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு சேவைகளையும் எங்கள் நிறுவனம் வழங்குகிறது." என்றார். இந்த ஒப்பந்தம் வாயிலாக, பெங்களூரில் இயங்கும் டான்ஸ்கே வங்கியின் அலுவலகம் மற்றும் இதன் 1,400 ஊழியர்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் கீழ் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web