2027-ல் 20000 பேருக்கு வேலை… இன்ஃபோசிஸ் அறிவிப்பு!
தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், 2027 நிதியாண்டில் 20 ஆயிரம் கல்லூரி பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் இதைத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு துறையில் உருவாகும் புதிய வாய்ப்புகளை மையமாகக் கொண்டு நிறுவனத்தின் சேவை திட்டங்கள் மாற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.
2026 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் மட்டும் ஏற்கனவே 18 ஆயிரம் புதிய பட்டதாரிகள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த காலாண்டில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிகரித்துள்ளனர். நடப்பு நிதியாண்டு முடிவில் மேலும் 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சில பாரம்பரிய பணிகளில் சுருக்கம் இருந்தாலும், அதைவிட அதிக வளர்ச்சி புதிய தொழில்நுட்பப் பணிகளில் இருப்பதாக பரேக் தெரிவித்தார்.
மென்பொருள் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை, பழைய பயன்பாடுகளை நவீனமாக மாற்றுவது போன்ற துறைகளில் ஏஐ காரணமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. ஏஐ முகவர்கள் பயன்பாடு அதிகரிப்பதால் திட்டங்கள் நேரடியாக செயல்படுத்தும் நிலைக்கு வந்துள்ளன என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, புதிய ஊழியர்களுக்கான தொடக்க சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளதுடன், சிறப்பு தொழில்நுட்பப் பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் வரை சம்பளத் தொகுப்புகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
