ஈவிகேஎஸ். இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் காலமானார்!
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத் (72) நேற்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னை திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது மறைவு அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த இனியன் சம்பத், பெரியாரின் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இவரது மனைவி டெய்சி ராணி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. எளிமையான வாழ்க்கை முறையால் பலரின் மரியாதையை பெற்றிருந்தார்.

இனியன் சம்பத்தின் உடலுக்கு திக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நேற்று மாலை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
