வைரல் வீடியோ... 5 லட்சம் லஞ்சம்... கையும் களவுமாக பிடித்த போது கதறி அழுத காவல் ஆய்வாளர்!

 
காவல்

 

கர்நாடக மாநிலம் கே.பி. அக்ரஹாரா காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த கோவிந்தராஜு, ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபரை மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த தொழிலதிபர் லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கோவிந்தராஜுவிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்டதும் ஆய்வாளர் கோவிந்தராஜு நடுரோட்டில் நின்று “என்னை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சியபடி அழுதார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டத்தின் முன் யாரும் பெரியவர் அல்ல என்பதற்கான எச்சரிக்கையாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!