இன்ஸ்டா விபரீதம்... காதலனுடன் சேர்ந்து தாயை கொலைச் செய்த மாணவி!

 
காதல் கொலை இளம்பெண்

தெலுங்கானா மாநிலத்தில்  ஹைதராபாத் ஜூடி மெட்லா பகுதியில்  வசித்து வருபவர் 10ம் வகுப்பு மாணவி. இவர்  தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த  சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூடி மெட்லாவில் உள்ள என்எல்பி நகரில் வசித்து வருபவர்   அஞ்சலி என்ற பெண். இவர் தெலுங்கானா கலாச்சாரத் துறையில் நாட்டுப்புற பாடகியாக இருந்தார். கணவரை  பிரிந்து வாழ்ந்த அஞ்சலி தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார். இவரது 16 வயது மகள், 10ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி மானவி தற்கொலை

சில மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நல்கொண்டா பகுதியில் வசித்து வரும் 19 வயது டிஜே பிளேயர் சிவாவுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறிய நிலையில், தாயார் அஞ்சலி இதை கண்டித்துள்ளார். இதனை விடுத்து படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறியுள்ளார். இனி  சிவாவை சந்திக்க வேண்டாம் என உத்தரவிட்டிருந்தார்.  இந்த மாணவி இதனை கண்டு கொள்ளாமல் வழக்கம் போல் பேசி கொண்டிருந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றிருந்தார். போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நகைகளை மீட்டு அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

மேலும், சிவா அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாரா என்பது குறித்த மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது.  தன் காதலுக்கு தடையாக இருப்பதாக நினைத்த சிறுமி, தனது காதலன் சிவாவிடம் தாயை கொல்வதற்குத் திட்டம் கூறியுள்ளார்.

காதல்

அதன்படி சிவா, அவரது தம்பி எஸ்வந்த் மற்றும் சிறுமி ஆகிய மூவரும் முதலில் துப்பட்டாவால் அஞ்சலியின் கழுத்தை நெறித்துள்ளனர். அவர் மூச்சு திணறி மயங்கிய பின்னர் மசாலா அரைக்கும் உரலால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்தனர்.

அஞ்சலியின் அலறல் சத்தம் கேட்ட அஞ்சலியின் இளைய மகள் வெளியில் வந்ததும், “எதுவும் இல்லை” எனக் கூறி அவரையும் அறைக்குள் தள்ளி பூட்டி வைத்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார்  மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10ம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற சம்பவம், தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது