இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்.. லைவ்வில் உயிரை விட்ட இளைஞர்.. பகீர் வீடியோ

 
இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் செய்யும் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. அதிக லைக்ஸ்களை வாங்கும் ஆர்வத்தில் ஆபத்தான முறையில் வீடியோ எடுக்க முயன்று அதில் மாட்டிக்கொள்கின்றனர். அப்போது சிலர் உயிரிழந்துவிடும் சோகமும் நிகழ்கிறது.

அந்த வகையில் மாணவர்கள் சிலர் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக வீடியோ எடுக்க முயன்றபோது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள கல்லூரியின் மேற்கூரையில் இளைஞர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக வீடியோ எடுத்துள்ளனர்.


அப்போது 20 வயது மாணவர் கீழே விழுந்து உயிரிழந்தார். அதாவது 20 அடி உயரமுடைய மாடியில் இருந்து இளைஞர் தவறி விழுந்தார். தலையில் காயமடைந்த அவரை நண்பர்கள் மருத்துவமனை தூக்கிச்சென்றனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதக மருத்துவர்கள் கூறினர். அந்த இளைஞரின் கடைசி நிமிடங்களின் வீடியோ அவரது நண்பரின் மொபைல் போனில் படம்பிடிக்கப்பட்டது. அந்த காட்சிகள் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்ஸ்டாகிராம்

மாணவர் உயிரிழப்பை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி சந்தோஷ் சிங் தனது ட்விட்டரில் வீடியோவைப் பகிர்ந்து, எப்போதும் விழிப்பு உணர்வு அவசியம், என்று பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web