இவருக்கு பதில் இவர்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய பெண் தலைவராக அமுதா நியமனம்! ​​​​​​​

 
அமுதா

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் . இவர் இன்று பிப்ரவரி 28ம் தேதி வெள்ளிக்கிழமையுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமுதா சுமார் 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரிந்து வருகிறார்.   அமுதா வடகிழக்கு பருவ மழை தரவுகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

அமுதா

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் மொத்தமாக 6 மண்டல வானிலை ஆய்வு மையங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி சென்னை, கவுகாத்தி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், டெல்லி ஆகிய 6 இடங்களில் மண்டல வானிலை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.   அந்த வரிசையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
இந்த வானிலை மையம் 18ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் அமைக்கப்பட்டது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது. மழை, வெயில், தட்பவெப்ப நிலை போன்ற  தகவல்களை வழங்கி வருகிறது.

அமுதா
ஹைதராபாத், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 வானிலை ஆய்வு மையங்கள் சென்னை வானிலை மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது.  பருவமழை காலம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் இந்த வானிலை மையம் வானிலை தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கி வருகிறது.
இதனால் வானிலை மைய இயக்குநர்கள் பள்ளி மாணவர்கள் மத்தியில் எப்போதும் பரீட்சயமானவர்களாகவே இருக்கின்றனர்.   தற்போது இயக்குநராக உள்ள பாலச்சந்திரன் ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு பிறகு சென்னை வானிலை மையத்தின் புதிய தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web