இன்டெல் இணை நிறுவனர் காலமானார்! பிரபலங்கள் இரங்கல்!

 
கோர்டன் மூர்

பிரபல பன்னாட்டு நிறுவனமான இண்டெல் கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் கோர்டன் மூர். இவருக்கு வயது 94. இவர் நேற்று உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட  பன்னாட்டு  மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இன்டெல் கார்ப்பரேஷன்.  1960 களில் கணினி சிப் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி குறித்த மூரின் தொலைநோக்கு சிந்தனை உயர் தொழில்நுட்ப சகாப்தத்திற்கு களம் அமைத்து கொடுத்தது. கலிஃபோர்னியா செமிகண்டக்டர் சிப் தயாரிப்பாளர், நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, மகத்தான அமெரிக்க ரயில் பாதை அல்லது எஃகுத் தொழில்களால் அதற்கு முன்னர் நடத்தப்பட்ட  தொழில்துறையின்  ஆதிக்கத்தை திரும்பி பார்க்க வைத்தது.

கோர்டன் மூர்

இது குறித்து மூர் எப்போதுமே தன்னை ஒரு 'ஆக்ஸிடெண்ட்டல் தொழில்முனைவோர்' எனக் கூறிக் கொள்வார். அவருக்கு சிறுவயதிலிருந்தே ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணமே இருந்து வந்தது. வளரும் மைக்ரோசிப் துறையில் அவரது முதலீடு எலக்ட்ரானிக்ஸ் உலகின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாக மாற உதவியது. நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள்  கணினிகளை கையாண்ட பெருமை எப்போதும் மூரையே சேரும்.  அத்துடன் டோஸ்டர் ஓவன்கள், குளியலறை ஸ்கேல்கள் மற்றும் பொம்மை தீயணைப்பு வண்டிகள் முதல் தொலைபேசிகள், ஆட்டோமொபைல்கள் மற்றும் விமானம் வரை அனைத்திற்கான நுண்செயலிகளும் உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர் மூர் என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

rip

மூர் அவருடைய மனைவி பெட்டி மூருடன் சேர்ந்து நன்கொடைகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான பங்களிப்பையும் முன்னெடுத்தார். இருவரும் இணைந்து 2001 ல்கோர்டன் மற்றும் பெட்டி மூர் அறக்கட்டளையை நிறுவினர். அதன் மூலம் 175 மில்லியன் இன்டெல் பங்குகளை நன்கொடையாக வழங்கினர். இதில்  2001ல்  கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்கு 600மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  மூருடன் இணைந்து பணிபுரிந்து வந்த சக ஊழியரான ராபர்ட் நொய்ஸ் தான் ஜூலை 1968 ல் இன்டெல்லை நிறுவினர். மூர் 1975ல் இண்டெல் பிரஸிடெண்ட்டாகவும், நிர்வாக துணைத் தலைவராகவும்,  1979 ல் வாரியத் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார், 1987 ஆம் ஆண்டில் அவர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இவருடைய மறைவிற்கு பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web