குடியரசு தின பாதுகாப்பு… ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!

 
குடியரசு தினம்

குடியரசு தினவிழா திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

சனிக்கிழமை முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறநகர் மற்றும் விரைவு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் பைகள், சூட்கேஸ்கள் உள்ளிட்டவை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டது.

மேலும் புறநகர் மற்றும் விரைவு ரயில்களின் பெட்டிகளிலும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருடன் இணைந்து தண்டவாளப் பகுதிகளிலும் கண்காணிப்பு நடத்தப்படுவதாக இருப்புப் பாதை போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!