திருச்சி சிவா வீட்டில் தாக்குதல்! அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் வெறிச்செயல்!

 
கார் கண்ணாடி


திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எம்பி. சிவா. தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பவர்  அமைச்சர் கே.என்.நேரு. இவர் திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளராகவும் இருந்து வருகிறார்.  திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் இன்று காலை மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் திருச்சி சிவாவின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

சிவா

அத்துடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.  இன்று காலை மார்ச்15ம் தேதி திருச்சி சிவா வீடு அமைந்துள்ள பகுதியில் புதிய விளையாட்டு திடல் டென்னிஸ் மைதான திறப்பு விழா ஒன்று நடத்தப்பட்டது.சிவாவின் இல்லம் அருகே நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் நேரு பங்கேற்க வந்தார். அப்போது, சிவாவின் பெயர் மற்றும் புகைப்படம் பேனரில் இடம்பெறவில்லை என கூறி அவரது ஆதரவாளர்கள் கே.என்‌.நேருவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயற்சி செய்தனர். 

நேரு

இந்த விளையாட்டு திடலை அமைச்சர் நேரு  திறந்து வைத்த நிலையில் இந்த திறப்பு விழாவுக்கான கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு திருச்சி சிவாவின்  ஆதரவாளர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இதில் இரு அமைச்சரின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை காவல்துறை  கண்டுகொள்ளவில்லை. சிவாவின் பெயரை போடாமல் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு  பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களாக கூறப்படும் சிலர் திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில்  சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web