ஆகஸ்ட் 12ம் தேதி சர்வதேச காத்தாடி திருவிழா!!

 
பட்டம்

மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு இந்த திருவிழா மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்ட  நிலையில், 2வது ஆண்டாக காத்தாடி திருவிழா மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.இந்த காத்தாடி திருவிழாவில், இந்தியா   மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

பட்டம்
சென்னை மாமல்லபுரத்தில்  2வது ஆண்டாக நடைபெற உள்ள இந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் தாய்லாந்து ,அமெரிக்கா ,மலேசியா ,வியட்நாம் ,சிங்கப்பூர் உட்பட    பல்வேறு நாடுகளில் இருந்து கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 3  அடி முதல் சுமார் 20 அடி வரையிலான காத்தாடிகள் பறக்க விடப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக தாய்லாந்து, அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 அணிகள் வந்துள்ளன. பட்டம் பறக்க விடுதலில் கைதேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு காத்தாடிகளை பறக்கவிடுகின்றனர். இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட, ஓஷன் வியூ பகுதி ஜேசிபி இயந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காத்தாடி திருவிழாவைத் காண குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. பெரியவர்கள் 150 ரூபாய் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற வேண்டும்

மாஞ்சா நூல் விற்பனை, பட்டம் பறக்க விட தடை !

உணவு அரங்குகள் மற்றும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 10 முதல் 20 காற்றாடிகளைக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு காற்றாடியும் 20 முதல் 25 அடி வரை உள்ளன.அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால்  இந்த போட்டியை நடத்துவதற்காக அந்த இடத்தை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காற்றாடி திருவிழா நடத்த நிறைய திறந்த வெளியும்,  காற்றும் அதிகம் வீச வேண்டும் அத்துடன்  கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுடைய திருவிழா நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web