சர்வதேச ஸ்குவாஷ் போட்டி... தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் ‘சாம்பியன்’.. ஜோஸ்னா அதிர்ச்சி தோல்வி!
சென்னை நேரு பூங்காவில் நடைபெற்ற எச்.சி.எல். இந்திய சுற்றுப்பயண சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இறுதிச் சுற்றில், தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டத்தை வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங், தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவை வீழ்த்திப் பட்டத்தைக் கைப்பற்றினார்.

தமிழகத்தைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் (தரவரிசை 46) எகிப்தின் ஆடம் ஹவாலுடன் விளையாடினார். ஆட்டத்தின் முடிவில் வேலவன் செந்தில்குமார் 11-7, 11-9, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் ஆடம் ஹவாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கினார்.

அதே போன்று பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் டெல்லியைச் சேர்ந்த 17 வயது வீராங்கனை அனாஹத் சிங் (தரவரிசை 29) தமிழகத்தின் மூத்த வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவை (39) எதிர்கொண்டு விளையாடினா. ஆட்டத்தின் முடிவில், அனாஹத் சிங் 11-8, 11-13, 11-13, 11-6, 11-8 என்ற செட் கணக்கில் ஜோஸ்னா சின்னப்பாவை எதிர்கொண்டு, போராடிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
