இன்று175 நாடுகளில் சர்வதேச யோகா தினம் உற்சாகக் கொண்டாட்டம்!

 
சர்வதேச யோகா தினம்

வருடத்தின் மிக நீண்ட பகல் பொழுதாக கணிக்கப்பட்டுள்ள தினமானது ஜூன் மாதத்தின் 21ம் தேதி. இந்நாளில் தான் உலக யோகா தினம் அமைய வேண்டும் என பிரதமர் மோடி ஐநா சபையில் முன் மொழிந்தார்.

உலகின்  மிக நீண்ட பகல் பொழுது நாள், அதாவது இன்றைய தினம் சூரியன் விரைவில் உதயமாகும், மிக  தாமதமாக சூரியன் அஸ்தமிக்கும். இந்த நாளை சம்மர் ஸால்ஸ்டிஸ் என அழைக்கின்றோம். இந்த முன்மொழிவின் படி கடந்த 2014ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

சர்வதேச யோகா தினம்

ஒரு வருடத்தில் மாதப்பிறப்பு, அறுவடைத் திருநாள் என ஒவ்வொரு சிறப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதை போலவே வரலாற்று அடிப்படையில்  ஜூன் 21 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்த நாளில் தான்  பல உலக நாடுகளில்  பருவ மாற்றத்தில், கிளைமேட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இதனால் சம்மர் ஸால்ஸ்டிஸ்  அதாவது ‘சூரியன் மறையவில்லை’ என்பதை குறிக்கும் வகையில் சிறப்பு பெறுகிறது. இந்த தினத்தில்  பகல் பொழுது நீளமாகவும், இரவுப் பொழுது குறைவாகவும் இருக்கும்.  இந்த அதிசயம்  இயற்கையாகவே அமைந்துள்ளது.

சர்வதேச யோகா தினம்

இதன் அடிப்படையில்தான் வடக்கு ஹெமிஸ்பியர் பகுதிகளில் கோடைக் காலமும், தெற்கு ஹெமிஸ்பியர் பகுதிகளில் மழைக்காலமும் தொடங்குகிறது.

எனவே இந்நாளில் தான் சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை பிரதமர்  மோடி வலியுறுத்தினார். யோகக் கலையில் பலவிதமான பயிற்சிகள் உள்ளன. அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவையே. அதிலும் மிக குறிப்பிடத்தக்கது சூரிய நமஸ்காரம். அதிகாலையில் சூரிய உதய நேரத்தில் 12 விதமான ஆசனங்களை ஒரே சுழற்சியில் செய்வது தான் சூரிய நமஸ்காரம்.

சூரிய நமஸ்காரம் செய்யும் பொழுது அதிகாலை நேரத்தில் நம்மை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள  தூய்மையான காற்று, யோகா ஆசனங்களை ஒரு சீராக செய்யும் பொழுது நாம் விடும் மூச்சு காற்றின் ரிதம் ஆகிய அனைத்துமே உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதனால் நீண்ட ஆயுளும் அமையப் பெறலாம் என்பது அனுபவஸ்தர்களின் வாக்கு. உலகம் முழுவதும் அமைந்துள்ள  175 நாடுகள் சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது