ஜப்பான் இணைய வேகத்தில் புதிய சாதனை... நொடிக்கு பல கோடித் தகவல்கள்!

 
japan japan

 

ஜப்பான் நாட்டின் தேசிய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைய வேகத்தில் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளனர். வினாடிக்கு 1.02 பெட்டாபிட்கள் என்ற அசுர வேகத்தில் தகவல்களைப் பரிமாறி இந்த மைல்கல்லை அவர்கள் எட்டியுள்ளனர். நவீன ஒளியிழைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 1,808 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த அதிவேக இணையச் சேவை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது.

இந்த அதீத வேகத்தின் மூலம் மிகப்பெரிய அளவிலான திரைப்படங்களைக்கூட வெறும் ஒரு நொடியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் அமையவுள்ள நவீன நகரங்கள் மற்றும் பிரம்மாண்டமான தரவு மையங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் முதுகெலும்பாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அமைப்புகளின் செயல்பாடுகளை இது பலமடங்கு வேகப்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சாதனை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய சூழலில் இத்தகைய கண்டுபிடிப்புகள் தொலைத்தொடர்பு துறையில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும். 2025 ம் ஆண்டு மே மாதம் நிகழ்த்தப்பட்ட இந்தச் சாதனை மூலம் ஜப்பான் நாடு மீண்டும் தனது தொழில்நுட்ப வலிமையை உலகிற்கு நிரூபித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!