காதலுக்கு இடையூறு... 84 இடங்களில் கத்திக்குத்து... தங்கையைக் கொடூரமாக கொன்ற இளைஞர்!
இத்தனைக் கொடூரமாக ஒருத்தன் கொலைச் செய்ய முடியுமா என்று நாடு முழுவதுமே பதைபதைக்க செய்தது அந்த செய்தி. உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் பகுதியில் , தனது காதலுக்கு இடையூறாக இருந்த சகோதரியை 84 இடங்களில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறான் இளைஞர் ஒருவன்.
உத்தரபிரதேச ம் ஆநிலம், மொரதாபாத் பகுதியில் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார் நீலிமா. இவரின் பிள்ளைகளான இரட்டையர்கள் ஹர்திக் மற்றும் ஹிமான்சிகா இருவரும் பொறியாளர்களாக வேலை செய்து வந்தனர். இந்நிலையில் சமீப காலமாக ஹர்திக் தனது வேலையில் கவனம் செலுத்தாமல், வீட்டிலும் சகஜமாக இல்லாமல் எப்போதுமே சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த பழக்கத்தை தாயார் நீலிமாவும், சகோதரி ஹிமான்சிகாவும் அடிக்கடி கண்டித்து வந்துள்ளனர். மேலும் ஹர்திக் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 6ம் தேதி தனது தாயின் அலுவலகத்திற்கு சென்ற ஹர்திக், வீட்டில், தாய்க்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்றபோது ஹிமான்சிகா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து நீலிமா அதிர்ச்சியடைந்து அலறினார். ஹர்திக்கிடம், செல்போன் பயன்படுத்துவதை நிறுத்தும்படி தொடர்ந்து கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் தங்கையை கொலை செய்ததாக ஹர்திக் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஹர்திக்கைக் கண்டித்த தாயாரையும் தாக்கியதை அடுத்து அவர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஹிமான்சிகாவின் உடலில் 84 வெட்டுக் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
