நீதிபதிக்கே இந்த நிலைமை... பெண் நீதிபதியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்!

 
பெண் நீதிபதி

ராஜஸ்தானில் ஜெய்பூரைச் சோ்ந்த பெண் நீதிபதி ஒருவரின் அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதனை 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா், நீதிபதியின் உதவியாளரிடம் நேரில் கொடுத்துள்ளார். நீதிபதியின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இருந்து அந்த பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அந்த இளைஞா் சென்றுவிட்டார்.

பார்சலை அந்த  பெண் நீதிபதி பிரித்துபார்த்தபோது, மார்பிங் மூலம் தனது புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றம் செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், 20 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டலும் இதில் விடுக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அந்த நீதிபதி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

பெண் நீதிபதி

பின்னர் இது குறித்து பெண் நீதிபதி அளித்த புகாரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நீதிபதி அந்த பார்சலை திறந்து பார்த்தபோது, அதில் சமூக வலைதளங்களில் அவா் பதிவிட்டிருந்த படங்களைக் கொண்டு ஆபாசமாக சித்தரித்து உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் இருந்தன. மேலும், தான் சொல்லும் இடத்தில் விரைவில் வந்து ரூ.20 லட்சம் தராவிட்டால் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாகவும் அந்த பார்சலில் இருந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக போலீசார் கூறினர்.

பெண் நீதிபதி

இந்த சம்பவம் நடந்த அடுத்த 20 நாள்களில் அவரது வீட்டுக்கும் இதேபோன்று மற்றொரு பார்சல் வந்துள்ளது. அதிலும் இதுபோன்று கூறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் வந்துசென்றது தெரிய வந்தது.  அதன் அடிப்படையில் இளைஞரை தீவிரமாக தேடி வருவதாக மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. பெண் நீதிபதிக்கே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web