போதையில் அரை நிர்வாணமாக பெண் ரகளை! நடுவானில் விமானத்தில் பரபரப்பு!

 
போதை

போதையில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இத்தாலி நாட்டு பெண்மணி ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் ரகளை செய்து கொண்டிருந்தது நடுவானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அபுதாபியிலிருந்து மும்பைக்கு பறந்து வந்து கொண்டிருந்த விஸ்டாரா நிறுவன விமானத்தில் இப்படி அரை நிர்வாண கோலத்தில் தரக்குறைவாக நடந்து கொண்ட இத்தாலிய பெண்மணியை போலீசார் கைது செய்தனர்.

அபுதாபியில் இருந்து மும்பைக்கு இத்தாலியை சேர்ந்த பாவ்லோ பெருசியோ என்பவர்  பயணிப்பதற்காக விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான யுகே 256 விமானத்தில் விலை குறைவான எகானமி பிரிவில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இந்நிலையில், விமானம் புறப்பட்டவுடன் பாவ்லோ, தனக்கு உயர் ரக வகுப்பான பிசினஸ் வகுப்பில் அமர்வதற்கு இருக்கை தர வேண்டும் என்று போதையில் விமான பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

Vistara

சாதாரண டிக்கெட் எடுத்து விட்டு, பிசினஸ் க்ளாஸ் கேட்டதற்கு அவர்கள் மறுத்த போது, மதுபோதையில் இருந்த பாவ்லோ, விமான பணியாளர்களை தாக்க தொடங்கியதாக தெரிகிறது. அதன் பிறகு தனது ஆடைகளை கழற்றி விட்டு அரை நிர்வாண கோலத்தில் விமானத்தில் இங்கும் அங்குமாக விமானத்திற்குள்ளேயே சுற்றித் திரிய துவங்கி விட்டார். உடனடியாக இது குறித்து விமானி, பாதுகாப்பு அமைப்புகளுக்கு தகவல் அளித்தார்.

விமானம் மும்பையில் தரையிறங்கியதும், போலீசார் பாவ்லோ பெருசியோவை கைது செய்தனர். விமானங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் இது போன்ற அத்துமீறல் சம்பவங்கள் விமான பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான பயணத்தின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்புகிறது.

women-arrest

திடீரென பெண் ஒருவர் தனது ஆடைகள் சிலவற்றை கழற்றி விட்டு விமானத்தில் அங்கும் இங்குமாக நடக்கத் தொடங்கினார். அந்தப் பெண்ணைக் கட்டுப்படுத்தி அடக்கி வைப்பதற்குள் சிறிது நேரம் சலசலப்பு தொடர்ந்தது. அந்த பெண், என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு போதையில் இருந்தார் என்று அதிகாரிகள் கூறினார்கள். இறுதியாக, அதிகாலை 4.53 மணியளவில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், அந்த பெண், ஏர் விஸ்தாரா விமானத்தின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web