முதலீட்டாளர்கள் அதிர்ச்சி... மதுபானக்கூடங்களுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்வு!
புதுச்சேரியில் சமீபத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மதுக்கூடங்களுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குவார்ட்டர் மது பாட்டிலுக்கு ரூ.6 முதல் உயர் ரக பாட்டிலுக்கு ரூ.30 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் 750 மிலி கொண்டு முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது. புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், மதுக்கூடங்களுக்கான லைசன்ஸ் கட்டணம் உயர்கிறது.
அதன்படி மொத்த கொள்முதல் கடைகளுக்கான ஆண்டு லைன்சன்ஸ் கட்டணம் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு
சில்லறைக் கடைகளுக்கான ஆண்டு லைன்சன்ஸ் கட்டணம் ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சமாக உயர்வு
சுற்றுலா பிரிவின் கீழ் உணவகங்களில் செயல்படும் மதுக்கூடங்களுக்கான ஆண்டு லைசன்ஸ் கட்டணம் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்வு

கலால்துறை மூலம் ரூ.275 கோடி கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக இத்தகைய கட்டண உயர்வுகளை புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
