கதறும் முதலீட்டாளர்கள்... பங்குச்சந்தையில் 4 நாட்களில் ரூ.9.19 லட்சம் கோடி காலி!

 
பங்குச்சந்தை

கடந்த 4 நாட்களில் சென்செக்ஸ் சுமார் 1,500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 84,180 என்ற நிலைக்குக் கீழ் சென்றது. நிஃப்டி 1.7% க்கும் மேல் சரிந்து 26,000 என்ற முக்கிய நிலைக்குக் கீழ் (25,876) நிலைபெற்றது. பிஎஸ்இ (BSE) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் 4 நாட்களில் மட்டும் ரூ. 9.19 லட்சம் கோடி குறைந்துள்ளது.

வீழ்ச்சிக்குக் காரணமான 5 முக்கிய காரணிகள்:

டிரம்ப் மற்றும் ரஷ்ய எண்ணெய் விவகாரம்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வதைக் கண்டித்து, இந்தியப் பொருட்கள் மீது 500% வரை வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார். இது சர்வதேச வர்த்தகத்தில் பெரும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

பங்குச்சந்தை

வெனிசுலா அரசியல் நெருக்கடி:

வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றம் :

ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்தே வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன.

வலுவிழந்த உலோக மற்றும் எரிசக்தித் துறை:

டாலர் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க வரிக் கொள்கைகளால் மெட்டல் (Metals) மற்றும் ஆயில் & கேஸ் (Oil & Gas) துறை பங்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பங்குச்சந்தை ஷேர்மார்க்கெட்

சீனா - ஜப்பான் வர்த்தகப் போர்:

சீனா, ஜப்பானுக்கு சில தொழில்நுட்பப் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை விதித்துள்ளது ஆசிய சந்தைகளில் ஒருவித மந்தநிலையை உருவாக்கியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் டிசிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. சந்தையின் பயத்தைக் குறிக்கும் 'இந்தியா விக்ஸ்' குறியீடு 9% உயர்ந்து, முதலீட்டாளர்களிடையே நிலவும் பதற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் 2026-27, இந்தச் சரிவிலிருந்து மீள ஏதேனும் ஊக்கமருந்தாக அமையுமா என முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!