இந்திய ராணுவத்தில் ஆட்சேர்க்கையான அழைப்பு... ஏப்ரல் 10 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

 
ராணுவம் எல்லை ராணுவம் எல்லை

இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய விண்ணப்பதாரர்கள் இந்த கூடுதல் கால அவகாசத்தைப் பயன்படுத்தித் தங்களது ராணுவத்திற்கு சேவையாற்றும் கனவை நனவாக்கிக் கொள்ளலாம்.

 இந்திய ராணுவம் முப்படை காஷ்மீர்

ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.joinindianarmy.nic.in-க்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை இணையதளம் வாயிலாகவே செலுத்திப் பதிவை உறுதி செய்து கொள்ளலாம். கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்க, விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 இந்த ராணுவ ஆட்சேர்ப்பு முறை மூன்று முக்கிய நிலைகளைக் கொண்டது. முதற்கட்டமாக எழுத்துத் தேர்வு கணினி வாயிலாக நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஓட்டம் மற்றும் பிற உடல் தகுதிச் சோதனைகள் நடத்தப்படும். இறுதி கட்டமாக உடல் ஆரோக்கியம் குறித்த விரிவான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ராணுவம்

இந்த ஆட்சேர்ப்பு தொடர்பான கூடுதல் சந்தேகங்கள் அல்லது தெளிவுரைகளுக்கு விண்ணப்பதாரர்கள் 044-2567 4924 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். நாட்டின் எல்லையைக் காக்கும் உன்னதப் பணியில் சேரத் துடிக்கும் தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!