ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பாஜகவில் இணைந்தார்!

 
 கேதர் ஜாதவ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ், பாஜகவில் இணைந்துள்ளார்.  ஐபிஎல் போட்டிகளில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்காக விளையாடியதன் மூலம் ரசிகர்களிடையே அதிகளவில் புகழ் பெற்றாவர். சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் சரியாக சோபிக்காத கேதர் ஜாதவ்,  கடந்த 2024ல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மும்பையில் மகாராஷ்டிர அமைச்சரும், பாஜக தலைவருமான சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இது குறித்து  ஜாதவ் கூறுகையில், "சத்ரபதி சிவாஜிக்கு தலைவணங்குகிறேன். பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்  தலைமையில் பாஜக சிறப்பாக செயல்படுகிறது. அதனால், பாஜகவில் இணைந்துள்ளேன்" எனக் கூறியுள்ளார்.  

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
2014 முதல் 2020 வரை இந்திய அணியில் விளையாடிய 39 வயதான கேதர் ஜாதவ், 2014ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், 2015ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். 2020ம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடியது அவருக்கு கடைசிப் போட்டியாக கருதப்படுகிறது.  

அவர் விளையாடிய 6 ஆண்டுகளில் 73 ஒருநாள் போட்டிகளில் 1389 ரன்கள் மற்றும் 27 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டிகளில் 122 ரன்களும் குவித்துள்ளார். மேலும், 2018 ஆசியக் கோப்பை, 2019 ஒருநாள் உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி அணிகளிலும் இடம்பெற்றிருந்தார்.

 கேதர் ஜாதவ்
இதற்கு முன்னதாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கௌதம் கம்பீர், இர்பான் பதான், முகமது அசாரூதின், நவ்ஜோத் சிங் சித்து  ஆகியோரின் வரிசையில் கேதர் ஜாதவ்வும் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web