ஐபிஎல் 2025 : நாளை சென்னை - பெங்களூரு போட்டி டிக்கெட் விற்பனை!
18-வது ஐபிஎல் தொடர் போட்டிகள் மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை கொல்கத்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மார்ச்23ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்து முடிந்தது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் திடலில் மார்ச் 28ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.இந்தப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - மும்பை அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 20 நிமிடங்களில் நிறைவடைந்தது. அதன்படி 38,000 இருக்கைகளுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் ஆன்லைனில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
