ஐபிஎல்: ராஜஸ்தான் அணியை சமாளிக்குமா சிஎஸ்கே? - சேப்பாக்கத்தில் இன்று மோதல்.. தீபக் சஹார் விளையாடுவது சந்தேகம்?

 
ஐபிஎல்

ஐபிஎல் திருவிழா தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் அணி பேட்டிங், பந்துவீச்சி, பீல்டிங்கில் அசத்தி வருகிறது. அதிரடியாக விளையாடி ரன்குவிக்கும் பட்லர், சஞ்சு சாம்சன், ஹெட்மேயர் போன்ற வீரர்கள் அணிக்கு பக்கப்பலமாக உள்ளனர். அதேபோல் வந்துவீச்சில் அஸ்போன்ற வீரர்கள் மிரட்டுகின்றனர். சென்னை அணி பேட்டிங்கில் அசத்தினாலும் பந்துவீச்சு பெரியளவுக்கு இல்லை.


இதனால் சென்னை அணி பெரும் தடுமாற்றத்தில் உள்ளது என்றே கூறலாம். பந்துவீச்சை பலப்படுத்தினால் சென்னை அணி வெற்றிக்கு வாய்ப்புள்ளது. இதனிடையே சென்னை அணி பெரிதும் நம்பியிருந்த தீபக் சஹார் காயம் அடைந்துள்ளதால் இப்போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. இது சென்னை அணிக்கு பின்னடைவாக உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று +2.067 நெட் ரன்ரேட்டுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது. இதேபோன்று சென்னை அணியும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் +0.356 என்ற ரன்ரேட்டின் அடிப்படையில் 5 ஆவது இடத்தில் உள்ளது. 
ஐபிஎல்
இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காணும் என்பதால் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் வெற்றிக்காக தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்றை ராஜஸ்தான் அணி நிர்வாகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. தோனி மற்றும் சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
    

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web