இன்று மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்... பெங்களூரு - கொல்கத்தா பலப்பரீட்சை... மழைக்கு வாய்ப்பு!

 
ஐபிஎல்
 


இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று மே 17ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணைபடி லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பின்னர் மே 29, 30 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் பிளே ஆஃப் சுற்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 3ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகின்றது.

ஐபிஎல்

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 10 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் ஐபிஎல் தொடர் நடைபெறுவது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுதியுள்ளது. ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகளை குவித்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். அஜிங்க்ய ரஹானே தலைமையிலான நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல்

இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் லீக் சுற்றை 15 புள்ளிகளுடனே நிறைவு செய்யும். இது நிகழ்ந்தாலும் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே முடிவாகும். மாறாக இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.

இன்றைய ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்படக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு நகரில் மழை பொழிவதற்கான வாய்ப்பு 65 சதவீதம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது