ஐ.பி.எல். மினி ஏலம் 2026 | ஒவ்வொரு அணியிடமும் இருப்புத் தொகை எவ்வளவு?! வெறும் ரூ.2.75 கோடியுடன் போராடும் மும்பை அணி?

 
ஐபிஎல்

19வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் இன்று டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 31 இடங்கள் உட்பட மொத்தம் 77 வீரர்களைத் தேர்வு செய்ய 10 அணிகளும் தயாராகி உள்ளன. இந்தச் சூழலில், தங்கள் முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக் கொண்ட பிறகு, ஒவ்வொரு அணியிடமும் மீதம் உள்ள இருப்புத்தொகையின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதிக பணம் வைத்திருக்கும் அணிகள்

ஏலத்தில் வீரர்களை வாங்குவதற்காக அதிகப்படியானப் பணத்தை வைத்திருக்கும் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) முதலிடத்தில் உள்ளது. அந்த அணியிடம் ரூ. 64.30 கோடி இருப்புத்தொகையாக உள்ளது. இவர்களைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ரூ. 43.40 கோடி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணி ரூ. 25.50 கோடி, மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி ரூ. 22.95 கோடி ஆகிய கணிசமான தொகைகளை வைத்துள்ளன. இந்த அணிகள் அதிகப் பணபலத்துடன் ஏலத்தை எதிர்கொள்ளவிருப்பதால், விலை உயர்ந்த வீரர்களை வாங்க அதிக வாய்ப்புள்ளது.

ஐபிஎல்

குறைந்த இருப்புத்தொகை கொண்ட அணிகள்

மறுபுறம், சில அணிகள் மிகக் குறைந்த இருப்புத்தொகையுடன் ஏலத்தைச் சந்திக்கவுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் (MI) அணி மிகக் குறைந்த தொகையான ரூ. 2.75 கோடியை மட்டுமே வைத்துள்ளது. இவர்களை விடச் சற்று அதிகமாகப் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ரூ. 11.50 கோடியை வைத்துள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் (DC) ரூ. 21.80 கோடி, நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ரூ. 16.40 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ரூ. 16.05 கோடி, மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) ரூ. 12.90 கோடி ஆகிய நடுத்தரத் தொகைகளை வைத்துள்ளன.

ஐபிஎல்

ஏலத்தின் எதிர்பார்ப்பு

மும்பை இந்தியன்ஸ் போன்ற முன்னணி அணிகள் மிகக் குறைந்தத் தொகையுடன் ஏலத்தைச் சந்திப்பதால், அவர்கள் தங்களுக்குத் தேவையான எஞ்சிய வீரர்களை வாங்குவதில் சவாலைச் சந்திக்க நேரிடும். அதிக இருப்புத்தொகை கொண்ட கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளின் செயல்பாடுகள், இந்தப் போட்டியில் யார் அதிக விலை போவார்கள் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியப் பங்காற்றும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!