ஐபிஎல் மினி ஏலம்: நட்சத்திர வீரர்களை வாரி சுருட்டிய சென்னை, கோல்கட்டா - முழு ஏலப் பட்டியல்!
பிரீமியர் லீக் (IPL) தொடரின் 2026 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் அபுதாபியில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பல சர்வதேச நட்சத்திர வீரர்களும், திறமையான இந்திய வீரர்களும் கோடிகளை அள்ளிச் சென்றுள்ளனர். குறிப்பாக, அதிகபட்ச தொகைக்குப் பல வீரர்களை ஏலம் எடுத்து கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்கள் அணிகளை வலுப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளன.
ஏலத்தின் உச்சம் கேமரூன் கிரீன் விலை ரூ. 25.20 கோடி
இந்த ஏலத்தின் மிக அதிகபட்ச விலைக்கு ஆஸ்திரேலியாவின் இளம் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரை ரூ. 25.20 கோடிக்கு கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது. இவரைத் தவிர்த்து, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவை அதே கோல்கட்டா அணி ரூ. 18 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது, இதுவும் ஒரு பெரிய விலையாகும்.
இந்திய வீரர்களுக்கு ஜாக்பாட்: சென்னையின் அதிரடி வேட்டை
இந்திய வீரர்கள் மீதும் அணிகள் தங்கள் கவனத்தைச் செலுத்திய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு இந்திய வீரர்களுக்காக அதிக தொகையைச் செலவிட்டுள்ளது:
பிரசாந்த் வீர் - ₹14.2 கோடிக்குச் சென்னை அணி ஏலம் எடுத்தது.
கார்த்திக் சர்மா - ₹14.20 கோடிக்குச் சென்னை அணி ஏலம் எடுத்தது.
மேலும் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாய்யை ராஜஸ்தான் அணி ₹7.20 கோடிக்கும், அனுபவ வீரர் வெங்கடேஷ் ஐயரை பெங்களூரு அணி ₹7 கோடிக்கும் வாங்கியுள்ளன.

சர்வதேச நட்சத்திரங்கள் அணி மாறியது!
பல்வேறு நாடுகளின் முன்னணி வீரர்கள் கணிசமான தொகைக்கு ஏலம் போயுள்ளனர்:
லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) அதிரடி ஆல்-ரவுண்டரை ₹13 கோடிக்கு ஐதராபாத் அணி வாங்கியுள்ளது.
முஸ்டாபிஷூர் ரஹ்மான் (வங்கதேசம்) ₹9.20 கோடிக்கு கோல்கட்டா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
ஜோஷ் இங்லிஸ் (ஆஸ்திரேலியா) ₹8.60 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் டேவிட் மில்லர் மற்றும் லுங்கி நிகிடி தலா ₹2 கோடிக்கு டில்லி அணியால் வாங்கப்பட்டனர்.
இலங்கையின் ஹசரங்கா ₹2 கோடிக்கு லக்னோ அணியும், குயின்டன் டி காக் ₹1 கோடிக்கு மும்பை அணியும் வாங்கினர்.
நியூசிலாந்தின் இளம் வீரர் ரச்சின் ரவிந்திரா ₹2 கோடிக்கு கோல்கட்டா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
மேத்யூ ஷார்ட், மேட் ஹென்றி, அகீல் ஹொசைன் போன்ற பல சர்வதேச வீரர்களைச் சென்னை அணி ₹1.50 கோடி முதல் ₹2 கோடி வரையிலான விலைகளில் ஏலம் எடுத்துள்ளது.

மற்ற ஏல விவரங்கள் (இந்திய வீரர்கள்)
அக்யூப் தர் - ₹8.4 கோடிக்கு டில்லி அணி.
மங்கேஷ் யாதவ் - ₹5.20 கோடிக்கு பெங்களூரு அணி.
ராகுல் சஹார் - ₹5.20 கோடிக்குச் சென்னை அணி.
அக்ஷத் ரகுவன்ஷி - ₹2.20 கோடிக்கு லக்னோ அணி.
சலீல் அரோரா - ₹1.50 கோடிக்கு ஐதராபாத் அணி.
நமன் திவாரி - ₹1 கோடிக்கு லக்னோ அணி.
குறைந்த விலைக்குப் போன வீரர்கள்:
ஆகாஷ் தீப் (₹1 கோடி), சர்பராஸ் கான் (₹75 லட்சம்), ஷிவம் மாவி (₹75 லட்சம்), சிவாங் குமார் (₹30 லட்சம்), கார்த்திக் தியாகி (₹30 லட்சம்), பிராசாந்த் சோலன்கி (₹30 லட்சம்) போன்ற பல இளம் வீரர்களும் பல்வேறு அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
