இன்று ஐபிஎல் ப்ளே ஆப் சுற்று டிக்கெட் விற்பனை!!

 
சென்னை சேப்பாக்கம்

16வது ஐ.பி.எல். கிரிக்கெட்  போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்  சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தஆட்டம்  மே 21ம் தேதியுடன்  முடிவடைகிறது. இதனையடுத்து 'பிளே-ஆப்' சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது.  இந்த ஆட்டத்தில் முதலாவது தகுதி சுற்று ஆட்டம் அதாவது முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மே 23ம் தேதியும்,  வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் 3 வது மற்றும் 4 வது இடங்களை பிடிக்கும் அணிகள் 24ம் தேதியும் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள்  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம்

சென்னையில் நடைபெறும் இந்த இரண்டு பிளே-ஆப் சுற்று ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டர்களில் விற்பனை செய்வதால் ஏற்படும் கூட்ட நெரிசல்  பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது. 2வது தகுதி சுற்று ஆட்டம் மே26ம் தேதியும், இறுதிப்போட்டி மே28ம் தேதியும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

சென்னை சேப்பாக்கம்

இன்னும் ஓரிரு நாட்களில் டிக்கெட் விற்பனைக்கான தேதியை ஐபிஎல் நிர்வாகம் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.16வது ஐ.பி.எல். சீசன் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  கோலாகலமாக தொடங்கி  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த ஊர்களில் 7 ஆட்டங்கள் ஆட முடிவு செய்யப்பட்டது.  அதன்படி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்கள் நடந்து முடிந்தன.  சேப்பாக்கத்தில் இதுவரை நடந்த 7 லீக் போட்டிகளுக்கும் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web