பெங்களூருவில் இன்று ஐபிஎல் 'சரவெடி' தொடக்கம்... கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு!

 
ஐபிஎல் ஐபிஎல்

கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 19-வது ஐபிஎல் (IPL 2026) கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 28) கோலாகலமாகத் தொடங்குகிறது. மே 31-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள இந்த மெகா தொடர், ரசிகர்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்குக் கிரிக்கெட் விருந்து அளிக்க உள்ளது. பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணி, முன்னாள் சாம்பியனான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சொந்த மண்ணில் களம் இறங்கும் பெங்களூரு அணிக்கு ரசிகர்களின் பலத்த ஆதரவு இருக்கும் என்பதால், இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரின் பிரம்மாண்டத்தை அங்கீகரிக்கும் வகையில், உலகப்புகழ் பெற்ற கூகுள் நிறுவனம் இன்று சிறப்பு 'டூடுல்' ஒன்றை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. கிரிக்கெட் மட்டையும், பந்தும் ஐபிஎல் உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தொடக்க விழாவில் திரைப்பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதால், பெங்களூரு நகரம் தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.

கடந்த முறை கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் ஆர்சிபி அணி, இந்த முறையும் வெற்றியுடன் தொடர முனைப்பு காட்டி வருகிறது. அதேவேளையில், புதிய உத்திகளுடன் களம் இறங்கும் ஹைதராபாத் அணி பதிலடி கொடுக்குமா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்றிரவு 8:00 மணிக்குத் தொடங்கும் இந்த மோதலில், பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறக்கும் என்பதால் சின்னசாமி மைதானத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஐபிஎல் 19-வது சீசன் இன்று தொடங்குவது சமூக வலைதளங்களில் #IPL2026 என்ற ஹேஷ்டேக் மூலம் டிரெண்டாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!