சைபர் மோசடி சிக்கலில் முன்னாள் ஐபிஎஸ்… துப்பாக்கியால் தற்கொலை முயற்சி!

 
cyber
 

பஞ்சாப் பாட்டியாலாவைச் சேர்ந்த முன்னாள் காவல் துறைத் தலைவர் அமர் சிங் சாஹல் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்புப் பகுதியில் பலத்த காயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், சாஹலின் அறையில் இருந்து 12 பக்க கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், ‘wealth equity advisers’ என்ற பெயரில் செயல்பட்ட சைபர் மோசடி கும்பலால் ரூ.8.10 கோடி வரை ஏமாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம் குழுக்கள் மூலம் பங்குச் சந்தையில் அதிக லாபம் தருவதாக கூறி திட்டமிட்டு மோசடி செய்ததாகவும், மத்திய அரசு, செபி அங்கீகாரம் உள்ளது என நம்ப வைத்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.

இந்த மோசடியால் மன உளைச்சலுக்கு ஆளானதால் தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்டதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரின் பெயர்களும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நாடு முழுவதும் சைபர் மோசடி குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!