அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் முயற்சி.. ட்ரோன், ஏவுகணைகள் தகர்ப்பு!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த மோதல் காரணமாக அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவற்றை வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்து வீழ்த்தியதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் முயற்சியால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
