தொடரும் பதற்றம்... ஈரான் வீசிய குண்டுகள் மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்து 5 பேர் படுகாயம்.!

ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேலில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியது. தற்பொழுது, பீர்ஷெபாவில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தை ஈரானிய ஏவுகணை தாக்கியதால், அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏவுகணை கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்ட் இஸ்ரேலிய இராணுவத்துடன் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.
🔥🔥There have been new missile attacks and direct hits on Beersheba, which is located in southern Iran's occupied territory.#Mossad #Microsoft #TelAviv #Tel_Aviv #Eilat #Haifa #Iran pic.twitter.com/akZDPjIEtJ
— Final Battle 313 (@FinalBattle_313) June 20, 2025
இந்நிலையில், இன்று ஜூன் 20ம் தேதி வெள்ளிக்கிழமை காலை இஸ்ரேலிய நகரமான பீர்ஷெபாவை ஈரான் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் அறிக்கையின்படி, ‘ஈரானின் ஏவுகணை மைக்ரோசாப்ட் அலுவலகம் அருகே விழுந்தது. இதனால் பல கார்கள் தீப்பிடித்தன, அருகிலுள்ள வீடுகளும் சேதமடைந்தன. குறிப்பாக, இந்த தாக்குதலில் இதில் 6 பேர் காயமடைந்தனர் என்ற தகவல் தெரிவித்துள்ளது.
பீர்ஷேபா நகரம் ஈரானின் ஏவுகணைகளால் தாக்கப்படுவது இது 2 வது நாளாகும். நேற்றைய தினம் வியாழக்கிழமை பீர்ஷெபாவில் உள்ள ஒரு மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணையை வீசியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுவரை நடந்த 7 நாட்கள் போரில் 24 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 600 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வாஷிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு ஒன்று, ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 639 ஐ எட்டியுள்ளதாகவும், 1329 பேர் காயமடைந்து இருப்பதாகவும் கூறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!