ஈரான் இஸ்ரேல் போரில் மத்தியஸ்தம் செய்ய விரும்பல... ட்ரம்ப் பளிச் பதில் !

இஸ்ரேல் ஈரான் போர் 8 நடைபெற்று வருகிறது. ஜூன் 21 ம் தேதி மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, ரஷ்ய அதிபர் புதின் அமைதி பரிந்துரைகளை முன்வைத்தார். இந்த முயற்சியை டிரம்ப் மறுதலித்து, “நான் மத்தியஸ்தம் செய்யும் பொறுப்பை விரும்பவில்லை” எனக் கூறி, புதினுக்கு பகிரங்கமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் ஜூன் 20ம் தேதி பேசிய புதின் இஸ்ரேல் மற்றும் ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கான திட்டங்களைப் பதிவிட்டுள்ளதாக அறிவித்தார். ரஷ்யா, ஈரானுடன் நீண்டகால பொருளாதார மற்றும் இராணுவ உறவுகளையும், இஸ்ரேலுடன் நல்ல நட்புடன் பழகி வருவதால், இந்த மோதலில் நடுநிலையாக மத்தியஸ்தம் செய்ய முடியும் என புடின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதின் குறிப்பாக, ஈரானின் புஷெர் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ரஷ்ய பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு நெதன்யாகு ஒப்புதல் அளித்ததாகவும் கூறினார். ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கும், இஸ்ரேலின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்கும் ஒரு சமரச தீர்வை விரும்புவதாக புதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, புதினினின் மத்தியஸ்த முயற்சியை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். “புடின் என்னுடன் இது குறித்து பேசினார், ஆனால் நான் மத்திய கிழக்கு மோதலில் மத்தியஸ்தம் செய்யும் பொறுப்பை எடுக்க விரும்பவில்லை. அவர் முதலில் உக்ரைன்-ரஷ்யா மோதலை தீர்க்கட்டும், பிறகு மத்திய கிழக்கு பற்றி பேசலாம்,” என டிரம்ப் கூறினார்.
டிரம்பின் இந்த நிலைப்பாடு, அமெரிக்காவின் மத்திய கிழக்கு கொள்கையில் ரஷ்யாவின் செல்வாக்கை குறைக்கும் முயற்சியாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவான தனது வலுவான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.பலரும் போர் நிறுத்தத்தை எதிர்பார்க்கும் நிலையில் ட்ரம்ப் இப்படி பேசியிருப்பது போர் நிறுத்தத்திற்கு விரும்பவில்லை அதனால் தான் இப்படி பேசுகிறார் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!