ஈரான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கமல் கராசி அமெரிக்க தாக்குதலில் உயிரிழப்பு!

 
ஈரான் ஈரான்

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான மோதல், தற்போது ஒரு மாபெரும் போராக உருவெடுத்து ஒட்டுமொத்த உலகையுமே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 40 நாட்களாக நீடித்த இந்தப் போரில், கடந்த 7-ஆம் தேதி இரண்டு வார காலப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கடந்த 28-ஆம் தேதி போர் நிறுத்தத்தை முறித்து, ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இந்த அதிரடித் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொடூரத் தாக்குதலின் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், மறைந்த தலைமை மதகுரு காமேனியின் ஆலோசகருமான கமல் கராசியின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கமல் கராசி, உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் உருக்கத்துடன் தெரிவித்துள்ளன.

ஈரான்

முன்னதாக, பிப்ரவரி மாத இறுதியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட செய்தி உலகையே அதிர வைத்தது. நாட்டின் முக்கியத் தூண்களாக விளங்கிய காமேனி மற்றும் கமல் கராசி போன்ற தலைவர்கள் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டிருப்பது ஈரானுக்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், மறுபுறம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இரும்புக்கரம் ஈரானை நசுக்கி வருவதால், மத்திய கிழக்கு ஆசியாவில் எப்போது என்ன நடக்குமோ என்கிற பதற்றமான சூழலே நீடித்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்