இஸ்ரேலுக்கு பதிலடி... ஈரான் உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலை மீது ஏவுகணைத் தாக்குதல்!

 
ஈரான் ஈரான்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலை மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவு மற்றும் அந்நாட்டுத் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கியதற்குப் பதிலடியாக இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த ஈரான் ஒரே நாளில் ஒன்பது வளைகுடா நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் மிக முக்கியமாக, கத்தாரின் ராஸ் லஃபான் தொழில் நகரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற எரிவாயு ஆலை பலத்த சேதமடைந்துள்ளது. ஈரானின் ஏவுகணைகள் தாக்கியதில் அந்தத் தொழில் நகரத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் கத்தார் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நல்வாய்ப்பாக, இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், உலகிற்கே எரிபொருள் வழங்கும் இந்த முக்கிய மையத்தில் ஏற்பட்டுள்ள சேதம் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, ஈரானின் எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். அதே சமயம், வளைகுடா நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மையங்களை ஈரான் தொடர்ந்து இலக்கு வைத்தால், அதற்கான விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் இந்த ஆக்ரோஷமான பதிலடியால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதுடன், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!