ஈரான் ஏவுகணை தாக்குதல்... அமீரகத்தில் 3 பேர் உயிரிழப்பு, 78 பேர் படுகாயம்!
ஈரான் அமீரகத்தை குறிவைத்து நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் மூவர் உயிரிழந்ததாகவும் எழுபத்து எட்டு பேர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சமீப நாட்களில் ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவியதாக கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவற்றை அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 4 அன்று மட்டும் மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மொத்தமாக 189 பாலிஸ்டிக் ஏவுகணைகள் கண்டறியப்பட்டதில் 175 அழிக்கப்பட்டதாகவும், சில கடலில் விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் 941 ஆளில்லா விமானங்கள் கண்டறியப்பட்டதில் 876 இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆளில்லா விமானங்கள் அமீரக எல்லைக்குள் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குரூஸ் வகை ஏவுகணைகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்த தாக்குதல்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமீரகம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை அமீரக அரசு கடுமையாக கண்டித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் நலனையும் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
