ஈரான் புதிய தலைவர் உடல்நிலை பாதிப்பு?… கோமாவில் உள்ளாரா ?

 
ஈரான் ஈரான்

ஈரான் நாட்டின் புதிய தலைமை மதகுருவாக அறிவிக்கப்பட்ட மொஜ்தபா கமேனி கோமா நிலையில் இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் தலைமை மதகுரு ஆயத்துல்லா அலி கமேனி பிப்ரவரி 28 அன்று நடந்த தாக்குதலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பதவியேற்ற பிறகு அவர் பொதுமக்கள் முன்னிலையில் இதுவரை தோன்றாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

மொஜ்தபா கமேனியின் முதல் அறிக்கையும் நேரடியாக அவர் வெளியிடாமல் செய்தியாளர் மூலம் அரசுத் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தாக்குதல் நடந்தபோது அவருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஒரு காலை இழந்திருக்கக் கூடும் என்றும் சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அவர் தெஹ்ரான் நகரில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வயிற்றுப் பகுதி அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் கோமா நிலையில் இருந்தால் தற்போதைய போர் நடவடிக்கைகளை யார் நடத்துகின்றனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் தலைவரின்றியும் போரை இயக்கும் அமைப்பை முன்னாள் தலைவர் உருவாக்கியிருந்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!