ஈரான் – அமெரிக்கா பதற்றம் ... போர்க் கப்பல் மூழ்கியதற்கு பதிலடி தாக்குதல் !
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரான் கடற்படையின் போர்க் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற கூட்டு கடற்படை பயிற்சியை முடித்து திரும்பிய ஐஆர்ஐஎஸ் டேனா என்ற ஈரான் போர்க் கப்பல் மீது சக்திவாய்ந்த டார்பிடோ குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 87 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.
இந்த சம்பவத்தில் கடலில் தத்தளித்த 32 வீரர்களை இலங்கை கடற்படை மீட்டதாக கூறப்படுகிறது. மேலும் காணாமல் போன 60க்கும் மேற்பட்ட வீரர்களை தேடும் பணியில் இலங்கை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ஈரான் கடற்படையின் பல போர்க் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடியாக வடக்கு பெர்சியன் வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் தீப்பற்றி எரிவதாகவும் கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
