சௌதி அரேபியா, கத்தார் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் ... ஈரான் அதிரடி எச்சரிக்கை!

 
ஈரான் ஈரான்

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சௌதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு இன்று (மார்ச் 18ம் தேதி , புதன்கிழமை) பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் மிகப்பெரிய எரிசக்தி மையமான 'தெற்கு பார்ஸ்'  எரிவாயு வயல் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில், ஈரானின் முக்கிய எரிவாயு கிடங்கு மற்றும் சுத்தகரிப்பு நிலையம் பலத்த சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல் மிகவும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டுள்ள கத்தார் உள்ளிட்ட அண்டை நாடுகள், இதற்குத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. இருப்பினும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால், வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய எரிசக்தி நிலையங்களைத் தகர்க்கப் போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. குறிப்பாகச் சௌதி அரேபியாவின் 'சம்ரெஃப்'  ) சுத்தகரிப்பு நிலையம், 'ஜுபைல்'   வேதிப்பொருள் வளாகம், ஐக்கிய அரபு அமீரகத்தின் 'அல் ஹசன்'  எரிவாயு வயல் மற்றும் கத்தாரின் எரிசக்தி மையங்கள் ஈரானின் இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உயரிய மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் நிலைகொண்டுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கட்டமைப்புகள் மீது ஈரானியப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தற்போது எரிசக்தி நிலையங்களையும் இலக்காக அறிவித்துள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் பெரும் மாற்றம் ஏற்படக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!