ஈரான் போருக்கு தயார்... அறிவிப்பை தொடர்ந்து உச்சகட்ட பதற்றம்!

 
ஈரான்

ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவுடன் ஈரானுக்கு இடையிலான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பக்பூர், “எங்கள் படையினர் எப்போதும் துப்பாக்கியின் விசையை மீது வைத்துப் போருக்கு தயார் நிலையில் உள்ளனர். அமெரிக்கா அல்லது இஸ்ரேல் எங்களைத் தவறாகத் தாக்க முயற்சித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் கைதான போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான தாக்குதல்களை விட எதிர்வரும் தாக்குதல்கள் பல மடங்கு தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த போராட்ட பதற்றத்தால் பாதுகாப்பு காரணமாக ஐரோப்பிய விமான நிறுவனங்கள், ஏா் பிரான்ஸ், நெதா்லாந்தின் கேஎல்எம் போன்றவை துபை மற்றும் டெல் அவிவ் உள்ளிட்ட விமானப் பாதைகளில் சேவைகளை ரத்து செய்துள்ளன. ஈரானில் நடந்த போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,137 ஆகவும், அரசு தரப்பில் 3,117 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!