அதிகாரங்களுக்கு அடிபணியாது... ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் திட்டவட்டம்!
ஈரான் எந்த அதிகார அழுத்தத்திற்கும் அடிபணியாது என்றும், யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தில் உறுதியாக இருப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அணுசக்தி திட்டம் தொடர்பான முதல்கட்ட மறைமுக பேச்சுவார்த்தை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. அப்போது ஓமன் வெளியுறவு அமைச்சருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் டெஹ்ரானில் நடந்த உச்சி மாநாட்டில் அராக்சி இந்த கருத்தை வெளிப்படுத்தினார். ஈரான் அணுகுண்டு தயாரிக்கவில்லை என்றாலும், பெரிய நாடுகளின் ஆதிக்கத்திற்கு தளராது செயல்படுவோம் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். நட்பு நாடுகளின் முயற்சியால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை முன்னேறுவது நல்ல முன்னேற்றம் என அவர் குறிப்பிட்டார். மரியாதை அளிக்கும் நாடுகளுக்கு ஈரான் எப்போதும் மரியாதை அளிக்கும் என்றும், ராணுவ பலத்தை பயன்படுத்தும் முயற்சிகளை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.
இதற்கிடையில், பொருளாதார சிக்கல்கள் காரணமாக ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அழுத்தம் கொடுக்க அமெரிக்கா மத்திய கிழக்கில் போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை நிறுத்தியுள்ளது. அணு ஆயுதம் தயாரிக்க 90 சதவீத யுரேனியம் தேவைப்படும்போது, தற்போது 60 சதவீதம் வரை செறிவூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கிய நிலையில் அடுத்த கட்ட சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
