ஈரானில் பள்ளி மீது வான்தாக்குதல் ... 40 மாணவிகள் பலி!

 
ஈரான்

ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணம் மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளி மீது வான்தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் நாற்பது மாணவிகள் உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நாற்பத்திஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இந்த செய்தி அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படை தளம் அமைந்துள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கா அல்லது இஸ்ரேல் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடவில்லை. அதே நாளில் தெஹ்ரான் நகரிலும் வான்தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூழ்நிலை மேலும் பதற்றமாகியுள்ளது.

இதற்கு பதிலடியாக ஈரானும் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் உள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் போர் சூழ்நிலை தீவிரமடைந்துள்ளது. உலக நாடுகள் கவலையுடன் கண்காணித்து வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!