ஈரான் மீது தொடர் தாக்குதலில் 787 பேர் பலி ... ரெட் க்ரெஸ்சென்ட் அதிர்ச்சித் தகவல்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தொடர் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ஈரானின் Iranian Red Crescent Society இன்று வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட உள்ளனர். பிப்ரவரி 28 முதல் 131க்கும் மேற்பட்ட நகரங்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களை ஈரான் தரப்பு “அப்பட்டமான ஆக்கிரமிப்பு” என்று கடுமையாக விமர்சித்துள்ளது. பதிலடி நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் வளைகுடா பகுதி முழுவதும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் துறை, தாக்குதல்கள் 6 வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் ஈரானில் அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் முழுத் திறனுடன் செயல்பட்டாலும் மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சமூகம் உடனடி தலையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மத்திய கிழக்கு நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
