ஈரானில் புதிய உச்ச தலைவர்… மோஜ்தபா கமேனி தேர்வு!
ஈரான் நாட்டின் உச்சத் தலைவராக மோஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஈரான் இண்டெர்நேஷனல் தகவல் வெளியிட்டுள்ளது. மறைந்த அலி அயத்துல்லா கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்ய நிபுணர்கள் சபை கூடினர். இடைக்காலமாக அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கமேனியின் இரண்டாவது மகன் பொறுப்பேற்கிறார் என கூறப்படுகிறது.
ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு பதிலடியாக வளைகுடா பகுதிகளில் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. தலைநகர் தெஹ்ரான் பகுதியில் நடந்த கூட்டுத் தாக்குதலில் பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக தகவல் பரவியுள்ளது.

56 வயதான மோஜ்தபா, நீண்டகால வாரிசாக கருதப்பட்டவர் என கூறப்படுகிறது. வாரிசு அரசியலை எதிர்த்து வந்த நிலையில், தந்தைக்குப் பின்னர் மகன் தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை ஆதரவு இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமையால் மத்திய கிழக்குப் பதற்றம் மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
