ஈரான் அதிபர் தாக்கப்பட்ட நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு... !

 
ஈரான் ஈரான்

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில்  மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் அணு

சௌதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் குறிவைக்கப்பட்டதால், மத்திய கிழக்கில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோருவதாக ஈரான் அதிபர் அரசு தொலைக்காட்சி மூலம் தெரிவித்துள்ளார்.

ஈரான்

மேலும், அண்டை நாடுகள் ஈரானை தாக்கினால் மட்டுமே இனி பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும்,   இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.  பிப்ரவரி 28 ம் தேதி  அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!