தாக்குதல் நடத்தினால் பெரும் இழப்பு... ஈரானுக்கு சவுதி கடும் எச்சரிக்கை!
அரபு நாடுகள் மீது நடைபெறும் தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்ந்தால் டெஹ்ரான் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் சவுதி அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஈரானின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல்கள் இரு நாடுகளுக்கிடையேயான தற்போதைய மற்றும் எதிர்கால உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சவுதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
