இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை... ஈரான் வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!

 
ஈரான் ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா ஈரான்

ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெஹ்ரான் உட்பட   பல முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்   பிப்ரவரி 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஈரான்

இந்நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தற்போது தங்களது திட்டத்தில் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   இந்த மோதலில் இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!