அமெரிக்க போர்க் கப்பல் மீது ஈரான் தாக்குதல்?…
அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய போர்க் கப்பலான ஆபிரகாம் லிங்கன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28 முதல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பதிலடி நடவடிக்கையாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓமன் கடற்பரப்பில் இருந்த ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பல் மீது ஏவுகணைகள் மற்றும் மனிதர் இல்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சி காவல்படை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பல் இயங்க முடியாத வகையில் சேதமடைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இஸ்ரேலை குறிவைத்தும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் ஈரான் தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை மறுத்துள்ளது. ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பல் தொடர்ந்து தனது பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஈரான் ஏவிய ஏவுகணைகள் கப்பலுக்கு அருகிலும் வரவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு கடற்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக ஆபிரகாம் லிங்கன் மற்றும் மற்றொரு பெரிய போர்க் கப்பலும் முன்கூட்டியே நிலைநிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
