ஈரானில் வார்-டைம் லீடர் அலி லாரிஜானி, சுலைமானிக்கு இறுதிச் சடங்குகள்... லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி!
ஈரானின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அலி லாரிஜானி (Ali Larijani), இஸ்ரேலிய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல் இன்று (மார்ச் 18) அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளராகவும், போர்க்காலத்தின் முக்கியத் தளபதியாகவும் விளங்கிய லாரிஜானியின் மறைவு அந்நாட்டுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. முன்னதாக, ஈரானின் உச்சபட்ச மதகுரு அலி கமேனி கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், மற்றொரு முக்கியத் தலைவரை ஈரான் இழந்துள்ளது.
டெஹ்ரான் நகரில் நடைபெற்ற இந்த இறுதிச் சடங்கில், லாரிஜானிக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் கருப்பு உடையணிந்து திரண்டனர். முன்னதாக 2020-ஆம் ஆண்டு அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட காசிம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தைப் போலவே, லாரிஜானிக்கும் பல நகரங்களில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. மக்கள் "அமெரிக்காவிற்கு வீழ்ச்சி", "இஸ்ரேலுக்கு மரணம்" என ஆவேசமாக முழக்கமிட்டனர். லாரிஜானி தனது இறுதிப் பயணத்திற்கு முன்பாக எழுதிய உருக்கமான கடிதத்தை ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது, இது அந்நாட்டு மக்களிடையே பெரும் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

லாரிஜானி மற்றும் பாசிஜ் (Basij) படைத் தலைவர் சுலைமானி ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன. இதற்குப் பழிவாங்கும் விதமாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அண்டை நாடுகள் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகளை உஷார் நிலையில் வைத்துள்ளன. ஈரானின் பாதுகாப்புச் சூழல் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஈரான் எடுக்கப்போகும் ராணுவ நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
