"ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பழி தீர்ப்போம் !"... இஸ்ரேல், அமெரிக்காவிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

 
trump trump

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் கூட்டுத் தாக்குதலில், அந்த நாட்டின் முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டு வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தற்போது ஈரானின் தேசிய பாதுகாப்புத் தலைவரும், கமேனிக்கு அடுத்தபடியாக மிகவும் சக்திவாய்ந்தவருமான அலி லாரிஜானி (67) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஈரானின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் முக்கியத் தூணாக விளங்கிய இவரது மரணம் அந்த நாட்டிற்குப் பேரிடியாகக் கருதப்படுகிறது.

லாரிஜானியின் மறைவையடுத்து, ஈரானின் தற்போதைய தலைமை மதகுருவாகப் பொறுப்பேற்றுள்ள மோஜ்தபா கமேனி விடுத்துள்ள எச்சரிக்கை போரின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. "சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் உரிய முறையில் பழி தீர்க்கப்படும்; இந்தத் தியாகிகளைக் கொன்றவர்கள் அதற்கான விலையை விரைவில் கொடுக்க நேரிடும்" என அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார். ஈரானியப் படைகள் ஏற்கனவே வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி வரும் நிலையில், தலைமைப் பீடத்திலிருந்து வந்துள்ள இந்த எச்சரிக்கை பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையே, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் தங்களின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்படுவதைச் சவுதி அரேபியா வன்மையாகக் கண்டித்துள்ளது. வளைகுடா நாடுகள் மீதான தனது ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் சவுதி அரேபியா தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான படைகள் ஈரானின் ராணுவ நிலைகளைத் தொடர்ந்து சிதைத்து வரும் சூழலில், சவுதி போன்ற அண்டை நாடுகளும் போரில் நேரடியாகக் குதித்தால் ஒட்டுமொத்த வளைகுடாப் பகுதியும் சுடுகாடாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!